Breaking News

நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகனுமா!!! 12 ம் வகுப்பு படித்தவர்கள் zoho நிறுவனத்தில் இலவச படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்:-

அட்மின் மீடியா
0

நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகனுமா!!! 12 ம் வகுப்பு படித்தவர்கள் zoho நிறுவனத்தில் இலவச படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்:-

சோகோ கழகம் ஒரு இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் ஆகும் . சோகோ கழகம் இணைய அடிப்படையிலான வணிக கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. 

இந்நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் ப்ளேசன்டனில் ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்போது ஏழு நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. அதன் உலகளாவிய தலைமையகம் சென்னையில் உள்ளது.

சோகோ கழகம், தனது நிறுவனத்திற்கு தேவையான பணியாட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சோகோ பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருகிறது. 

சோகா பல்கலைக்கழகம் இரண்டு இடங்களில் செயல்படுகிறது. தென்காசி மற்றும் சென்னை ஆகிய இரு இடங்களில் செயல்படுகிறது.

கல்லூரியில் படிக்கமுடியாமல் பள்ளிப்படிப்பை முடித்த பல மாணவர்களை சோகோ கழகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகளை அளித்து அதன் நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பையும் அளிக்கிறது.

 

படிப்புகள்:-

School of Technology

School of Design

School of Business

School for Advanced Study

School for Graduate

Studies

Marupadi

கல்விதகுதி:-


பிளஸ் 2 முடித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்

 

 வயது வரம்பு:-

17 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்கள் மட்டும்

 

தேர்வு:-

நுழைவுத்தேர்வு இருக்கும் மற்றும், நேர்காணலுக்கு பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

 

விண்ணப்பிக்க:-

https://www.zohoschools.com/admission-form

சிறப்பம்சங்கள்:-

2 ஆண்டுகள் படிப்பு காலம் ஆகும்

முற்றிலும் இலவச படிப்பு

3 வேளையும் இலவச உணவு 

இலவச லேப்டாப்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு:- மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு:- இன்டெர்ன்ஷிப்' பயிற்சி காலத்தில், மாதந்தோறும் ரூ.15 ஆயிரம்ஊக்கதொகை


மேலும் விவரங்களுக்கு:-

https://www.youtube.com/watch?v=Ss8hN71i_Vs

மேலும் விவரங்களுக்கு:-

https://www.youtube.com/watch?v=bP2bKMdt4Ds

Tags: கல்வி செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback