கல்லூரி மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் pudhumai penn scheme
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்து, மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ம்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.
தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெற https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார் கார்டு மற்றும் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து,தமிழகத்தில் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்ய நேற்று முன்தினம் முதல் சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அர்சு அறிவித்திருந்தது
இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்
சான்றிதழ் படிப்பு (Certificate course),
பட்டயம் படிப்பு (Diploma / ITI, D.TEd., courses),
இளங்க லைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses),
தொழில்சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.(Agri). B.V.Sc., B.Fsc., B.L, etc.)
பாரா மெடிக்கல் படிப்பு (Nursing. Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.. CUITO D000.).
இளநிலை,தொழிற்கல்வி,மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி.இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தபப்டும்.
குறிப்பாக,மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன்பெற்று வந்தாலும்,இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.
அதே சமயம்,2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்திற்கு http://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும்,2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும், முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியருக்கு இந்த நிதியுதவி திட்டம் பொருந்தாது
மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவிகள் மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
https://www.adminmedia.in/2022/06/1000_25.html
pudhumai penn scheme in tamil
pudhumai penn scheme
pudhumai penn scheme in tamilnadu
Tamil Nadu Government launched Pudhumai Penn Scheme
புதுமை பெண் திட்டம்
Tags: தமிழக செய்திகள்