Breaking News

டெல்லியில் மதரசாவில் சிறுவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 டெல்லியில் மதரசாவில் சிறுவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முழு விவரம்..

 


டெல்லியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்க் பகுதியில் உள்ள மசூதிக்கும்  மதரசாவிற்க்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றார் அவருடன் டெல்லியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா (ஓய்வு), ராஷ்டிரிய லோக்தளம் தேசிய துணைத் தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், ராம் லால் மற்றும் இந்திரேஷ் குமார் .உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் மோகன் பகவத் மதரசாவில் உள்ள குழந்தைகளுடன் சுமார் 1 மணிநேரத்திற்க்கும் மேல் உரையாடினார், அவர்களுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்று கேட்டறிந்தார் மோகன் பகவத் மதரசாவுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.

சிறுவர்கள் இடையே பேசிய பகவத், நாட்டின் வருங்காலம் நீங்கள் தான் உங்களது படிப்பு மற்றும் நாட்டுப்பணி ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாட்டில் இப்போது நிலவும் சகிப்புத்தன்மை அற்ற சூழல் முற்றிலும் தவறானது என்றும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும் என்றும் இஸ்லாமியர்களை சமூக விரோதிகள் என்று கூறுவது வலியை ஏற்படுத்துவதாக வருத்தம் தெரிவித்தார்மேலும் அவர் காஃபிர்" என்ற சொல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாகக் கூறினார். மேலும் இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? அவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். மேலும், இந்துக்களை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்க்கு இஸ்லாமியர்கள் அரபி மொழியில் "காஃபிர்" என்றால் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அர்த்தம். அது பொதுவான வார்த்தை தான் இப்போது தான் புண்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது. அந்த குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை என்று கூறினோம் என மதரசாவின் இயக்குனர் முகமதுல் ஹசன் அவர்கள் தெரிவித்துள்ளார்

 மேலும் வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=Pz3uz07LQU4

 

 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback