பள்ளி,கல்லூரிகளில் ஹிஜாப் வழக்கு விசாரனை முடிந்தது- உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிற்கு எதிரான தொட்ப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல, சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் விசாரக்கப்பட்டு வந்தது. கடந்த 9 நாட்களாக இந்த வழக்கில் இரு தரப்பும் தொடர்ச்சியாகப் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் , இந்த வழக்கு
மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Tags: இந்திய செய்திகள்