Breaking News

5 ம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

  ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.



சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதியான நாளை சனிக்கிழமை

அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 

அக்டோபர் 4 ம் தேதி சரஸ்வதி பூஜை  4 

அக்டோபர் 5 ம்தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 

1-ம் தேதி முதல் அக். 5 ஆம் தேதி வரையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில், இடையே அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. 

அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. தனது உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது. 

இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback