சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 20 ஆக உயர்வு!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
எழும்பூர் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையம்
காட்பாடி ரயில் நிலையம்
செங்கல்பட்டு ரயில் நிலையம்
அரக்கோணம் ரயில் நிலையம்
திருவள்ளூர் ரயில் நிலையம்
ஆவடி ரயில் நிலையம்
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஒரு சில ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நடைமேடை கட்டணத்தை உயர்த்தி கொள்ள அண்மையில் ரயில்வே போர்டு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் ரூ. 10 லிருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. விழா காலங்களில் கூட்டத்தை தவிர்க்க அக்.1 முதல் 2023 ஜன.31 வரை கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்