கொல்கத்தாவில் தொழில் அதிபர் வீட்டில் ரெய்டு 17 கோடி பணம் பறிமுதல்....வீடியோ
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அமீர்கான் பெரும் தொழில் அதிபரான அவரும் அவரது மகனும் சில ஆண்டுகளுக்கு முன், ”இ-நக்கெட்ஸ்” என்ற மொபைல் கேம் செயலி ஒன்றை துவக்கியுள்ளனர்.
அதன்மூலம் ஆரம்ப காலத்தில், இந்த செயலில் முதலில் பயனாளர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டது. இது பயனர்களிடையே நம்பிக்கையை அளித்தது. மேலும் அவர்கள் அதிக சதவீத கமிஷன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்களுக்கு பெரிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கினர்.
பொதுமக்களிடமிருந்து கணிசமான தொகையை வசூலித்த பிறகு, திடீரென்று, அந்த செயலி நிறுத்தப்பட்டது.பின்னர் அந்த குறிப்பிட்ட ஆப் சர்வர்களில் இருந்து சுயவிவரத் தகவல் உட்பட அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்டது. அதன் பிறகு தான் பயனர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை தெரிந்து கொண்டனர். பலரிடமும் பண மோசடி நடத்தி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது. மேலும் இது தொடர்பாக அமீர்கான் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அமீர் கானுக்கு சொந்தமான ஆறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்தச் சோதனையின் போது ரூ.17 கோடி ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/thepublicnews24/status/1568659534343962624
Tags: இந்திய செய்திகள்