12 ம் வகுப்பு படித்து பட்டபடிப்பு படிப்பவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை (Guidelines) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும்
பெயரிலோ அல்லது முன்
எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக
நகலையும் இணைத்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள்
https://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
என்றும் மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது
உதவி தொகை எவ்வளவு:-
இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 ரூபாயும் அதேபோல் முதுகலை மாணவர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்:-
உதவித்தொகை பெறுவதற்கு மே 2022-ல் (+2) மேனிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம்
எப்படி விண்ணப்பிப்பது:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள் முக்கிய செய்தி