Breaking News

எஸ்பிஐ வங்கி வாட்ஸ்அப் சேவை பயன்படுத்துவது எப்படி... முழு விவரம்

அட்மின் மீடியா
0

எஸ்பிஐ வங்கி வாட்ஸ்அப் சேவை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 




இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையில் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளலாம், மேலும் மினி ஸ்டேட்மெண்ட் பெறலாம்.வாட்ஸ் அப் மூலம் பாதுகாப்பான வங்கி சேவைகளை பெறலாம் என பாரத ஸ்டேட் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

SBI-ல் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208933148 என்ற எண்ணிற்கு பின்வரும் வடிவத்தில் “WAREG ACCOUNT NUMBER” என SMS அனுப்பவும்.-

பதிவு வெற்றிகரமாக இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் Whatsapp-ல் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்-

உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து +919022690226 க்கு "Hi" என்று அனுப்பவும் மற்றும் Chat-Bot வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும்

சில காரணங்களால் உங்களால் Whatsapp வங்கி சேவைக்கு பதிவு செய்ய முடியவில்லை என்றால், SMS வடிவம் மற்றும் மொபைல் எண்ணை மீண்டும் சரிபார்க்கவும். 

மேலும், உங்கள் மொபைல் போனில் உங்கள் வங்கிக் கணக்கு எண் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து இந்த SMS அனுப்பப்பட வேண்டும். பிறகு, உங்கள் செல்போனில் 9022690226 எண்ணைச் சேமிக்கவும். அதன்பின்னர், அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் Hi என அனுப்பினால், எந்த சேவையை பெற விரும்புகிறீர்கள் என கேட்கப்படும். இதையடுத்து, நீங்கள் பெற விரும்பும் வசதியை தேர்ந்தெடுத்தால், அதுதொடர்பான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்

Account Balance, 

Mini statement, 

De-register from whatsapp banking ஆகிய மூன்று ஆப்ஷன்கள் வரும்.

முதல் ஆப்ஷனில் வங்கி கணக்கு இருப்பு தொகை பார்க்கலாம். 

இரண்டாவது ஆப்ஷனில் உங்கள் கணக்கின் மினி அறிக்கையை பார்க்கலாம். மூன்றாவது ஆப்ஷனில் வாட்சப் வங்கி சேவையில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு:-


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback