மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் தர்கா கந்தூரி விழா
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணம் பகுதியில் பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 16-ம் தேதி மேத்தப்பிள்ளை அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த கந்தூரி விழாவை அப்பகுதியில் உள்ள இந்து மக்களே நடத்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் கந்தூரி விழாவில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கந்தூரி விழாவில் கலந்து கொள்ள வெளியூர்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். சொந்த வீடுகளைப் பலரும் விற்றுச் சென்றுவிட்டபோதிலும், உள்ளூர் மக்கள் அவர்களுக்காக தங்கள் இல்லங்களில் தங்குவதற்கு இடம் கொடுத்து, தங்க வைக்கின்றார்கள்
கந்தூரி விழாவை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமானது மேத்தப்பிள்ளையப்பா பிறந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள், இந்துக்கள் கலந்து கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக வந்தனர். பின்னர் தர்காவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி