348 ஆப்கள் முடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அனுப்பியதற்காக உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட 348 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மக்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த செயலிகளை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்."
உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அந்த 348 மொபைல் செயலிகளை முடக்கியுள்ளது. ஏனெனில் இதுபோன்ற தரவு பரிமாற்றங்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பை மீறுகின்றன" என்று அவர் கூறியுள்ளார்
Tags: இந்திய செய்திகள்