கனமழை காரணமாக இன்று 04.08.2022 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இன்று 04.08.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
வால்பாறை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், சிறுமலை பகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்