அச்சிட்ட பேப்பர்களில் பஜ்ஜி போண்டா தர தடை ஏன் காரணம் என்ன முழு விவரம்
தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.தடையை மீறி அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி விநியோகிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏன் அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவுப்பொருள் தர தடைவிதிக்கப்பட்டுள்ளது
பொதுவாக செய்தித்தாள் உள்பட அச்சுக் காகிதங்களில் உணவுப் பண்டங்களை கட்டி மடித்துக் கொடுப்பதால் அவை உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. உணவுப் பண்டத்தை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் உணவைத் தயாரித்திருந்தாலும்,அச்சுக் காகிதத்தில் மடித்துக் கொடுப்பதால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கின்றது.
செய்தித்தாள் உள்பட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள இங்க் பல வேதிப்பொருட்களால் ஆனது அச்சுக் காகிதங்களில் உபயோகிக்கும் இங்க் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்களின் கலவை என்பதால் உடல்நலம் பாதிக்கப்படும். இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
பஜ்ஜி,போண்டா,வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் சுற்றிக்கொடுக்கும் போது,அச்சுக் காகிதத்தில் உள்ள இங்க் எளிதாக உணவு பொருள்களில் ஒட்டிக்கொள்கிறது. எனவே செய்தித்தாள் உள்பட அச்சுக் காகிதங்களின் மூலம் உணவுப் பண்டங்களை பேக் செய்து கொடுப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் இருப்பின் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்