Breaking News

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் முழு விவரம்..

அட்மின் மீடியா
0

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

 

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். 

குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் இணை நோய் உள்ளவர்கள் உடனே சிகிச்சை பெற வேண்டும்.

குரங்கு அம்மை சிகிச்சைக்கு தேவையான சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் குடல்புண் நோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் 

ஏதேனும் மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அதனை தெரியப்படுத்த வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

 


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback