என்ன நடக்குது இலங்கையில்...போராட்டக்காரர்கள் பிடியில் அதிபர் மாளிகை...வைரல் வீடியோக்கள் தொகுப்பு
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதன் பின்பு ரனில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர்
கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்துள்ளார்கள்
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் உளவுத்துறை எச்சரித்ததையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,நேற்று இரவே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.முன்னதாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று நடத்திய பிரம்மாண்ட பேரணிக்குப் பின்னர் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். இன்னொரு குழுவினர் மாளிகைக்குள் இருந்த சமையலறைக்குள் நுழைந்தனர்.
அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சமைக்கத் தொடங்கினர்.இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அதிபர் மாளிகையின் சமையலறை நிறைய உணவுப் பொருட்கள் நிறைவாக இருந்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் நீந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/bhoopendrasing5/status/1545701138233667584
https://twitter.com/KoDilshan/status/1545688923829022720
https://twitter.com/SriLankaTweet/status/1545704047663288320
https://twitter.com/GillianMcKeith/status/1545696610184822784
https://twitter.com/WorldBreakingN9/status/1545690613638889473
Tags: வெளிநாட்டு செய்திகள்