Breaking News

வாட்ஸப்பில் வெளிவர உள்ள அசத்தல் அப்டேட் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 வாட்ஸப்பில் வெளிவர உள்ள அசத்தல் அப்டேட் முழு விவரம்....




உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இதன் வாயிலாக நாம் கோப்புகள், ஆடியோ, வீடியோ என எல்லாவற்றையும் அனுப்ப முடியும். whatsapp நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை அள்ளி வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 


மெசேஜ்களை டெலிட் செய்யும் வசதி:-

நாம் அனுப்பிய குறுந்தகவலை, சம்பந்தப்பட்டவர் பார்க்கும் முன் delete for everyone என்ற வசதியை பயன்படுத்தி இரு பக்கமும் நிரந்தரமாக அதை அழிக்கலாம். ஆனால், இதற்கான காலக்கெடு, ஒரு மணி நேரம் 8 நிமிடம் மட்டுமே என்பது 

இனி வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதியை whatsapp விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 


மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி:-

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்பிய பிறகு அவற்றைத் திருத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள பிழைகள் இருந்தால் அதனை டெலிட் செய்ய வேண்டியதில்லை

இனி தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது


எமோஜி:-

வாட்ஸ்அப்பில் தற்போது எமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் வசதி ஒரே டோனில் இருக்கும் நிலையில் கருப்பு, வெள்ளை, மாநிறம் உள்பட பல ஸ்கின் டோன்கள் கொண்ட் எமோஜிகளை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இந்த வசதியும் தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. 



சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் எப்போது இவ்விரு வசதிகளும் பயனர்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவலை வாட்ஸ்அப் தெரிவிக்கவில்லை

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback