Breaking News

தமிழக வனபகுதியில் இனி யூக்கலிப்டஸ் மரங்களுக்கு தடை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அந்நிய மரங்களும் அகற்றப்படும் எனவும் இதற்காக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் இந்த விஷயத்தில் தமிழக அரசு வெறும் அறிக்கைகளை மட்டுமேதாக்கல் செய்கிறது. ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. தமிழகவனப்பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்ற 10 ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது.இந்தப் பணியை விரைவாக முடிக்க தனியாரிடம் கூட ஒப்படைக்கலாம். 

அந்நிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள தமிழக அரசே, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இனி தமிழகத்தில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback