Breaking News

பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூகப்பாதுகாப்புத்துறை உத்தரவு - என்ன என்ன கட்டுப்பாடுகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூகப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது

 


 இது குறித்து சமூகப்பாதுகாப்புத்துறை வேலியிட்டுள்ள உத்தரவில்

  • மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.
  • மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும்.
  • தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்
  • கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.
  • காலில் காலணி அணிய வேண்டும்.
  • மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். 
  • பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
  • பள்ளிக்கு செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும். 
  • பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும்.
  • மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
  • வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
  • ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும்.
  • மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது.
  • வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
  • அடிக்கடி கை, கால்கள் கழுவ வேண்டும்.
  • மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்லவும்.
  • மாணவ மாணவியர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு Tattoo போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. 
  • மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் சீருடைட்டையிலுள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது. 
  • வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெரியக்கூடாது 
  • மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்பல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணிய கூடாது.
  • மாணவ மாணவியர்கள் P.T. வகுப்பின்போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாட வேண்டும். வெளியே செல்லுதல் கூடாது.
  • ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.



 

 

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback