தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அட்மின் மீடியா
0
அரசு நிர்ணயத்த கட்டணத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் எச்சரித்துள்ளார்
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், தும்மங்குறிச்சி கிராமம், மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகம் அருகில், கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், கதவுஎண்: 5ல் இயங்கிவரும் தனியார் பொது இ-சேவைமையத்தில் அரசு நிர்ணயித்த சேவைக்கட்டணத்தை தவிர அதிககட்டணம் வசூலிப்பதாக வரப்பெற்ற புகாரினை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் திடீர் ஆய்வு செய்கையில் முதியோர் ஓய்வூதியதிட்டம் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக அதிகக் கட்டணம் வசூல் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனால். கூடுதல் கட்டணம் வசூலித்ததனியார் இ-சேவைமையத்தின் பயனாளர் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது இ-சேவைமையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்குமனு ஒன்றிற்குரூ.60-ம், ஓய்வூதியதிட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்குரூ.10-ம், இணைய வழி பட்டாமாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்குரூ.60-ம் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனவே. பொதுமக்கள் இடைதரகர்களை தவிர்த்து, அருகில் உள்ள வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவுசங்க இ-சேவை மையங்கள், மகளிர்திட்டங்களின் மூலம் கிராமஊராட்சிகளில் செயல்படும் இ சேவைமையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்றதனியார் இ-சேவைமையங்களை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மேற்குறிப்பிட்ட அரசுநிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிககட்டணம் பெறும் பொது சேவைமையங்களின் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tn.gov.in என்று மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/07/2022071544.pdf
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி