Breaking News

வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுபாட்டை இழந்து சாலையில் வழுக்கி விபத்து - 4 பேர் பலி பதரவைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் டோல்கேட் இயங்கி வருகிறது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று குந்தாபுரா என்ற பகுதியில் இருந்து ஹொனாவரா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் டோல்கேட்டை கடக்க முற்பட்டபோது 



ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில்  டோல்கேட் தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். டோல்கேட் ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளி அவரது மனைவி மற்றும் அவரது உறவினர் ஒருவர் உள்ளிட்ட3 பேர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி இறந்தார். 


ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் டோல்கேட் ஊழியர் ஒருவர் என இரண்டு நபர்கள் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/sijusreekumar/status/1549768034134265856

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback