ஆற்றில் செல்பி எடுத்த போது வெள்ளத்தில் சிக்கிய 3 சிறுவர்கள் தீயனைப்பு வீரர்கள் மீட்ட பரபரப்பு வைரல் வீடியோ
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் திடிரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர் நீண்ட நேரமாக போராடி 3 சிறுவர்களையும் பத்திரமாக தீயணைப்புத் துறையினர்மீட்டனர் அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகின்றது
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் 3 பேர், கரையில் இருந்து ஆற்றினுள் சற்று தூரத்தில் இருந்த பாறை மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர்.
திடீர் என காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் அதிகரித்தது கரைக்கு செல்ல முடியாத வகையில், நீரின் வேகமும் அதிகரித்தது இதனால், பாறை மீது நின்ற இளைஞர்கள், அங்கிருந்து வெளியேற வழியின்றி தவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சிறப்பு காவல் படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு வந்தனர் மிகுந்த போராட்டத்துக்கு சுமார் 2 மணிநேரத்திற்க்கு பிறகு 3 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். இளைஞர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புவீரர்களை மக்கள் பாராட்டினர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/airnews_Chennai/status/1548285408995205123
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ