வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.187 குறைந்து
அட்மின் மீடியா
0
ஜூலை மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 187 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையும் மாத முதல் நாளில் விலை நிர்ணயம் செய்யப்பட்கின்றது
இந்நிலையில் ஜூலை மாத தொடக்கமான இன்று வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை 187 குறைந்து ரூ.2,186 க்குவிற்பனையாகிறது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,018.50க்கு விற்பனைசெய்யப்படுகிறது..
Tags: தமிழக செய்திகள்