அதிமுக பொதுக்குழு நடக்குமா!!! 11ம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு...
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரண்டு தரப்பு வாதம் நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால் 11ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்கள்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள் வருகின்ற திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டனர். திங்கள் கிழமை காலை 10 மணிக்கு அதிமுகவில் பொதுக்குழு கூட உள்ள நிலையில் 9:00 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
Tags: அரசியல்