Breaking News

ஜூலை 1 இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மிக முக்கிய மாற்றங்கள்..முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜூலை 1 இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மிக முக்கிய 8 மாற்றங்கள்


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:-

இன்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும், வினியோகம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


புதிய தொழிலாளர் விதிகள் அமல்:-

நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம்.ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.

ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். 

புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம்,மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும்.இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம்.

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு:-

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நேற்று என்பதால், இன்று முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

டீமாட் கணக்குதாரர்களுக்கு கெடு:-

டீமேட் கணக்கிற்கான உங்கள் கேஒய்சியை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும், செய்ய தவறினால் கணக்கு செயலிழக்கப்படும். பெயர், முகவரி, PAN, செல்லுபடியாகும் மொபைல் எண், வருமான வரம்பு மற்றும் சரியான மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களுடன் உங்கள் KYC ஐ புதுப்பிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால், ஜூலை 1 முதல் உங்கள் டிமேட் கணக்கு செல்லாததாகிவிடும்.

ரிப்டோகரன்சி வரி:-

இன்று முதல் அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கும் 1% TDS வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் 1% TDS செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள் மாற்றம்:-

சில கிரெடிட் கார்டு விதிகள் ஜூலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பில் அறிவித்துள்ளது. 

இந்த விதிகளில், தவறான பில், பில் வழங்கும் தேதி, தாமதமாக பில் அனுப்புதல் மற்றும் கிரெடிட் கார்டை மூடுதல் போன்றவை தொடர்பாக பல விதிகள் மாறப்போகின்றன. இந்த விதிகள் நாளை முதல் மாற்றப்படும். ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் கிரெடிட் கார்டு மூடப்படாவிட்டால், நிறுவனம் மூடப்படும் வரை வாடிக்கையாளருக்கு தினசரி ரூ.500 செலுத்த வேண்டும்.

டாக்டர்கள், செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான வருமான வரி விதி மாற்றம்:-

நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற நபர்கள் அவற்றைப் பெறுவதற்கு ஜூலை 1 முதல் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. 

சுங்க கட்டணம் உயர்வு:-

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும், ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயணிக்க ஆட்டோ கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கு கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.49ல் இருந்து ரூ.54 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஜூலை 18 முதல்  ஜிஎஸ்டி வரி  உயர்வு:-

அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது.

கத்தி, 

பிளேடு

பேனா மை, 

கிரைண்டர்கள்,

எல்.இ.டி. விளக்குகள்,   

மின்னணு கழிவு பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட தோல்கள்  

அரிசி ஆலை இயந்திரங்கள்

நீர்மூழ்கி மோட்டார் பம்புகள் 

பால் பண்ணை இயந்திரங்கள்

சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள்,  

துணிகளுக்கு பிரிண்டிங் செய்யும் இங்கு

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒப்புதல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணி ஆகியவைகளுக்கும் வரி 5இல் இருந்து 12 சதவீதமாகவும் 12-ல் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு ஜூலை மாதம் 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback