வன ஊழியரை காட்டு யானை தாக்கும் அதிர்ச்சி வீடியோ
கோவை அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பகல் நேரத்தில் விரட்டியதால் எதிரே வந்த வேட்டை தடுப்பு காவலர் நாகராஜை யானை தாக்கும் அதிர்ச்சி வீடியோ
இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து வனப் பணியாளர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திக்கு தெரியாமல் ஆவேசமாக ஓடிக் கொண்டிருந்த யானை மதுக்கரை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் என்பவரை கீழே தள்ளி காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே காட்டு யானை வேட்டை தடுப்பு காவலர் நாகராஜை தாக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து உள்ளனர்.இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ