திருப்பூரில் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... இஸ்லாமியர்கள் போராட்டத்தால் பரபரப்பு! காரணம் என்ன...
அட்மின் மீடியா
0
திருப்பூரில் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... இஸ்லாமியர் போராட்டத்தால் பரபரப்பு! காரணம் என்ன...
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் அங்கு உள்ள இஸ்லாமியர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கு பள்ளிவாசல் சொந்த
இடத்தில் மசூதி ஏற்படுத்தி தொழுகை நடத்தி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அதை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி
குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் மசூதி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது மசூதிக்கு சீல் வைக்க தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலை காவல் துறையினர் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள்.
ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலுக்குள் இருந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
Tags: மார்க்க செய்தி