பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு முன்னாள் ஜார்க்கண்ட் ஆளுநரான திரவுபதி முர்மு பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மேலும் முதல் முறையாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி முர்மு போட்டியிடுகிறார்.
Tags: இந்திய செய்திகள்