மீண்டும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் செயல்படும் - அமைச்சர் அறிவிப்பு !!
மீண்டும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் செயல்படும் -
அமைச்சர் அறிவிப்பு !!
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G... U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. மழலையர் வகுப்புகள் எனப்படும் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுகிறது, அங்கன்வாடி மையங்களில் அந்த வகுப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்