தீர்மானங்களுக்கு ஒப்புதல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ப்பேன் - ஓ.பி.எஸ். நீதிமன்றத்தில் தகவல்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு காரசாரமான விவாதத்தை முன்வைத்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவு கூட்டம் நாளை ( ஜுன் 23 ) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதாடிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ''பொதுக்குழு அஜெண்டா இதுவரை வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. கட்சியினரிடம் கலந்தாலோசனை இல்லாமலேயே ஒற்றைத் தலைமை விவாதங்கள் தொடங்கியுள்ளன.
ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளபோது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஒற்றைத் தலைமை குறித்து செயற்குழுவும் எதுவும் பேசவில்லை. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது. தற்போது ஒற்றைத் தலைமை என திருத்தம் கொண்டு வர உள்ளனர். பொதுக்குழு வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது'' என்று வாதிட்டார். மேலும்அதிமுக தீர்மானக்குழு தயாரித்து அனுப்பிய 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
ஓபன்னீர் செல்வம் தரப்பு வாதம்
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வார்
23 தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஒப்புதல், இது தவிர வேறு எதையும் முடிவு எடுக்கக் கூடாது
ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க கூடாது
பொதுச் செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது
கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம்
நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல்
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்
பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது
இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை
பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது
கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும்
பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது
பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும் இது ஜனநாயக நடைமுறை
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது பொதுக்குழு தான் உச்சபட்ச அமைப்பு -தனித் தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வரலாம்
Tags: அரசியல் செய்திகள்