அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி!! முழு விவரம்...
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் சேவையாற்ற முடியும். இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு அறிவித்துள்ளதுஆனால் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.
அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம்.
4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்
இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.
இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.
அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.
வருமான வரி கிடையாது.
தனிப்பட்ட இன்சூரன்ஸ்,
மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவபடையில் சேர
இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க:-
https://joinindianarmy.nic.in/default.aspx
மேலும் விவரங்களுக்கு:-
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர
இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
என்ற அதிகாரப்பூர்வ இந்திய விமானப்படை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .
மேலும் விவரங்களுக்கு:-
https://careerindianairforce.cdac.in/assets/joining_instructions/AGNIVEER_VAYU.pdf
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் சேரவும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
https://www.joinindiannavy.gov.in/
மேலும் விவரங்களுக்கு:-
https://www.joinindiannavy.gov.in/en/page/selection-procedure-agniveer-ssr-and-agniveer-mr.html
தேவையான ஆவணங்கள்:-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்,
பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்
தேர்வுக் கட்டணமாக ரூ.250ஐ செலுத்த வேண்டும்.
1999,29 டிசம்பர் முதல் 2005ம் ஆண்டு ஜூன் 2ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: வேலைவாய்ப்பு