ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் கைது -வீடியோ
கோவை நீலாம்பூரை சேர்ந்த மோகனசுந்தரம் ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை, அவினாசி சாலை பன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று, பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளதை தட்டி கேட்டுள்ளார். அங்கு இருந்த போக்குவரத்து காவலர் தாக்கியுள்ளார் அப்போது அங்கிருந்த யாரோ அந்த சமபவத்தை வீடியோவாக சமூகவலைதளத்தில் ஷேர் செய்ததை அடுத்து அந்த வீடியோ வைரல் ஆனது இந்நிலையில்
இதுதொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
03.06.2022ம் தேதி மாலை 05.45 மணியளலில், கோவை சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் நிலைய காவலர் 2846 சதீஸ் என்பவர் E2 பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபன் மால் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் பணியில் இருந்துள்ளார்.23அப்போது மேற்படி போக்குவரத்து சிக்னலில் இருந்து சென்ற தனியார் பள்ளி வாகனம் ஒன்று ரோட்டில் குறுக்கே வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அப்பள்ளி வாகனத்தை சிக்னல் அருகே சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஸ்விகி நிறுவனத்தில் பணி செய்யும் மோகனசுந்தரம் என்பவர் தடுத்து நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் சம்பவம் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் 2846 சதீஸ் மேற்படி மோகனசுந்தரத்திடம் சென்று "இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என்று கேட்டு அவரை கைகளால் தாக்கியதாக வாட்ஸ்அப் குழுவில் வீடியோ வந்துள்ளது.
இது தொடர்பாக மோகனகந்தரம் இன்று 04.06.2022ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் E2 பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டூள்ளது. மேற்படி போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணிமிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் காவலர் சதீஷ் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்
வீடியோ பார்க்க-
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ