அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு சென்னையில் இளைஞர்கள் போராட்டம்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உத்ரகாண்ட், ராஜஸ்தான், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீகாரில் தொடங்கிய போராட்டம் பல மாநிலங்களுக்குப் பரவியது. சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெறும் நிலையில், பல்வேறு இடங்களில் ரயில்களுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், பீகாரில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தின் முன்பு திரண்ட இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இளைஞர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுஇதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்