தபால் மூலம் புதிய ஸ்மார்ட் கார்டு வீட்டிற்க்கே அனுப்பப்படும்- அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தபால் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் புதிய மின்ணனு குடும்ப அட்டைகளை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் சக்கரபாணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் புதிய மிண்னனு குடும்ப அட்டையை தபால் மூலம் பெற விரும்புகிறாரா?
அல்லது நேரில் பெற விரும்புகிறாரா? என விண்ணப்பிக்கும் போது விருப்பம் தெரிவிப்பதற்காக இணையதளத்தில் கேட்கப்படும்
தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ. 25ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.
குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ. 20 மற்றும் தபால் கட்டணம் ரூ. 25 என ரூ. 45 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும்
மேலும் தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெற விரும்பாதவா்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடா்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்