பறவையை காப்பாற்ற முயன்று கார் மோதி தொழிலதிபர் பலி - சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
மும்பை தொழிலதிபர் ஜர்ரிவாலா காரில் ஒரு பறவை மோதி கீழே விழுந்தது உடனே அவர் தனது காரை நிறுத்தி அந்தப் பறவையை காப்பாற்ற முயன்று இருக்கிறார் அப்போது பின்னால் வந்த டாக்ஸி மோதி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
மும்பை நெப்பியன் சீ ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அமர் ஜரிவாலா இவருக்கு வயது 43 இவர் தனது காரில் பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் கம்பம் 76-ம் நம்பர் அருகே கார் சென்ற போது பறவை ஒன்று காற்றாடியின் மாஞ்சா கயிற்றில் சிக்கி சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனை கண்ட அவர் டிரைவரிடம் காரை நிறுத்தும்படி தெரிவித்தார். இதன்பின்னர் காரில் இருந்து தொழிலதிபர் அமர் ஜரிவாலா மற்றும் கார் டிரைவர் சாம் காமத் (41) ஆகிய 2 பேர் சாலையில் கிடந்த பறவையை மீட்க சென்றனர். அப்போது மேம்பாலத்தில் அதி வேகத்தில் வந்த டாக்சி ஒன்று எதிர்பாராத விதமாக 2 பேர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தொழிலதிபர் அமர்ஜரிவாலாவும் உடன் இருந்த டிரைவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்கள். அதன்பின்பு அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அமர்ஜரிவாலா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டாக்சி டிரைவர் ரவிந்திர குமார் (38) என்பவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ தற்போது இனையதளத்தில் பரவிவருகின்றது
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ