Breaking News

மீண்டும் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை என பரவும் தகவல் உண்மை என்ன ரெயில்வே விளக்கம்

அட்மின் மீடியா
0

மீண்டும் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை என பரவும் தகவல் உண்மை என்ன ரெயில்வே விளக்கம்


பொதுவாக நாட்டின் மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது இந்த வசதியை 2020 மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வே ஒத்திவைத்தது. அதன் பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது கடந்த 2 ஆண்டுகளாக இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் கூடுதலாக செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


மேலும் மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில்  மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார் 

இந்த நிலையில், ஜூலை 1 முதல் முதியவர்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை என பரவும் தகவல்கள் பொய்யானவை என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் ஜூலை 1, 2022 முதல் மீண்டும் தொடங்கும் என்று போலியான ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. 

இது போன்ற எந்த அறிவிப்பும் இந்திய ரயில்வே துறையால் வெளியிடப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுகிறது என தற்போது மத்திய அரசின் PIB தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

Tags: FACT CHECK இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback