சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெறுவது எப்படி...முழு விவரம்
சாதி மதம் அற்றவர்' என சான்றிதழ் பெறுவது எப்படி?
சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது. வழக்கமாக சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை எதுவோ அதே போல் தான் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவேண்டும்
சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெறுவது எப்படி...முழு விவரம்
முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் (V.A.O) நாம் ஒரு வெள்ளை பேப்பரில் விடுநர், பெறுநர் போட்டு அதில் உங்கள் விவரங்கள் குறிப்பிட்டு பின்பு சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வேண்டி விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
நாம் கொடுத்த மனுவை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் நாம் அளித்த மனுமீது விசாரனை செய்து அறிக்கையை இனைத்து வருவாய் ஆய்வாளர் ஆர்.ஐ-க்கு (R.I) பரிந்துரை செய்து அனுப்பிவைப்பார்
அதன்பின்பு வருவாய் ஆய்வாளர் ஆர்.ஐ- அவர்கள் நாம் கொடுத்த மனுவையும் கிராம நிர்வாக அலுவலர் அளித்த அறிக்கையையும் ஒப்பிட்டு அதனை சரிபார்த்து அந்த மனுவை வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வார். வட்டாட்சியர் அதை சரிபார்த்து சான்றிதழ் வழங்க உத்தரவிடுவார். அவ்வளவுதான்.
குறிப்பு:-
தாசில்தார் அவர்கள் உங்கள் மனுவை நிராகரித்தால் நீங்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தும் நிவாரனம் கோரலாம்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி