மாணவர்களே எச்சரிக்கை!! பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்!! அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!!
மாணவர்களே எச்சரிக்கை!! பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்!! அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!!
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்
அண்ணா பல்கலைக் கழகத்தில் முன்பதிவிற்கும் , சீட்டிற்கும், விண்ணப்பங்கள் பெறவும் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புக்களை பார்வையிடலாம். மற்றபடி வரும் அனைத்து கவர்ச்சிகரமான விளம்பரங்களும் போலியானவை.
கல்லூரி மாணவிகள்பெற்றோர்களும், மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் இலவசமாக படிக்கலாம் எனப் பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இமெயில் அனுப்பட்டு வருகின்றன. அந்த இ- மெயில்கள் போலியானவை.
இந்த இமெயில்கள் குறிப்பாக என்.ஆர்.ஐ மாணவர்களை குறிவைத்து அனுப்பட்டு வருவதாக விசாரணையில் தெளிவாகியுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுகவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இமெயில்கள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்