Breaking News

ஜூலை 7ந் தேதி முதல் புனித ஹஜ் யாத்திரை தொடங்கும்....

அட்மின் மீடியா
0

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் இருந்தும் அரசு உதவியுடன் பலர் புனிதப் பயணம் செல்வார்கள்.இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. மேலும் தமிழக யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.



தமிழகத்தை பொறுத்தவரை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் முதலில் ஜெட்டா செல்வர். பின்னர் அங்கிருந்து மெக்கா செல்வது வழக்கம். அதன்பின் மெதீனாவிற்கு சென்று தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து சென்னை திரும்புகின்றனர்.

இந்தாண்டு மெக்கா ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்க உள்நாட்டினர் உள்பட 10 லட்சம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டில் உள்நாட்டைச் சேர்ந்த 1,000 யாத்திரீகர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்ட உள்நாட்டைச் சேர்ந்த 60,000 பேர் வரை, குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது அன்றைய தினம் மெக்கா மதினா ஆகிய இரண்டு புனித நகரங்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு கோவிட் வழிகாட்டு நெறிகள், பயணத் திட்டங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback