300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை-பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம் வீடியோ!
300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை-பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம் வீடியோ!
குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் உள்ள திரங்காத்ரா தாலுகா துதாபூர் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 18 மாத குழந்தையை இந்திய ராணுவம் மீட்டது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் உள்ள திரங்காத்ரா தாலுகா துதாபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, சிவம் என்ற 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது,
உடனடியாக பெற்றோர்கள் காவல்நிலையத்திற்க்கு தகவல் தர அங்கு வந்த உதவிக் காவல் கண்காணிப்பாளர் அந்தப் பகுதியின் ராணுவ நிலையத்துக்குப் போன் செய்து குழந்தையை மீட்கக் கோரினார்.நிலைமையை உணர்ந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரவ் தலைமையில் அத்தியாவசிய மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலைமையை ஆய்வு செய்த குழுவினர், உலோக கொக்கியை மணிலா கயிற்றில் கட்டி,300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இறக்கினர். குழுவினரால் மெதுவாக ஆனால் சீராக மேலே இழுக்கப்பட்டார், பின்னர், போர்வெல்லில் இருந்து மீட்கப்பட்டார் முதலுதவிக்காக திரங்காத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர், தற்போது ஷிவமின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ