Breaking News

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 13ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப உத்தரவு..

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில்‌ அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாக உள்ள 13,331 ஆசிரியர்‌ பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில்‌ ஓராண்டுக்குள்‌ நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நியமனம் செய்யப்படும்

இந்த பணி முற்றிலும்‌ தற்காலிகமானவை 

இவர்களுக்கு மதிப்பூதியம்‌ மட்டுமே வழங்கப்படும்‌ 

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இந்த பணியிடங்களில், பள்ளிக் கல்வித்‌துறை மூலமாக ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள்‌ அந்த பணியிடங்களில்‌ வேலை செய்ய விருப்பப்பட்டலோ தற்காலிமாக நியமிக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ உடனடியாக பணியில்‌ இருந்து நீக்கப்படுவார்கள்‌ 

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.7,500, 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.10,000, 

முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்‌என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback