Breaking News

ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!-மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 



நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 4வது சனிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அன்று வேலை நாளாக அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback