மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகள் மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் பெண் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் 2022ஐத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு மாதாந்திர உதவித்தொகையாக அரசு பள்ளி மாணவிகளுக்கு தலா ரூ.1000. பெண்கள் இளங்கலை, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்புகளை முடிக்கும் வரை இந்தத் தொகை வழங்கப்படும்.
கல்விதகுதி:-
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்க்கல்வி திட்டத்தில் பயன்பெறுவர்.
விண்ணப்பிப்பது எப்படி:-
கல்லூரி வாயிலாகவோ அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
தேவையான ஆவணம்:-
மாணவிகளின் ஆதார்,
வங்கி கணக்கு புத்தகம்,
கல்வி சான்றிதழ்கள்
புகைப்படம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:-
முதலில் https://penkalvi.tn.gov.in/ இந்த லின்ங்கில் சென்று உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டு உள் நுழையுங்கள்
அடுத்து அதில் உங்கள் பெயர்,தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, முகவரி, பள்ளி படிப்பு விவரம், கல்லூரி படிப்பு விவரம், என அனைத்தையும் சரியாக பதிவிடுங்கள்
அடுத்து அதில் உங்கள் புகைபடத்தை அப்லோடு செய்யுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வங்கி விவரம் பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
Tags: தமிழக செய்திகள்