RTE தனியார் பள்ளியில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில் மே.25 வரை அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்.
இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.
இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
குழந்தையின் புகைப்படம்.
குழந்தையின் ஆதார் அட்டை
குழந்தையின் சாதி சான்றிதழ்
தந்தையின் வருமான சான்றிதழ்.
பெற்றோர்களின் ஆதார் அட்டை.
குடும்ப அட்டை
RTE விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் Start Application என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பின்பு விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்
அடுத்து உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள நீங்கள் சேர்க்க விரும்பும் தனியார் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டும்.
பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
அடுத்து உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு பதிவு எண் குறுந்தகவல் மூலம் அவ்வளவுதான்
மேலும் விவரங்களுக்கு: 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்