வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க விரைவில் அறிவிப்பு வெளியாகும்
அட்மின் மீடியா
0
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பவர் சுஷில் சந்திரா பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா
18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு நாள் என்பதற்கு பதிலாக வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்தில் நான்கு தேதிகளில் பதிவு செய்ய முகாம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதால் தேர்தல் எப்போது நடைபெறும் மற்றும் வாக்காளர்களின் தொலைபேசி எண்களில் பூத் விவரங்கள் போன்ற கூடுதல் சேவைகளை நாங்கள் வழங்க முடியும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா கூறினார்
இதனிடையே,தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.அதன்படி,ராஜீவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று (மே 15 ஆம் தேதி) முதல் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்