Breaking News

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட இடத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேசமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரித்தனர்.

விசாரணை முடிவில், ஞானவாபி மசூதில் முஸ்லிம்கள் எந்த தடையுமின்றி தொழுகை நடத்தலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று வாரணாசி மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே தொழுகை செய்ய அனுமதி என்ற மாவட்ட கோர்ட்டின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக  அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர் ஜெய்ன் எனும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து  மசூதிக்கு சீல் வைக்குமாறும், அப்பகுதிக்குள் ஆட்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல என்றும் செயற்கை நீரூற்று அமைப்புஎன்றும் ஞானவாபி மசூதி நிர்வாகம் கூறியுள்ளது. அக்குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான குளம் என்று மசூதி தரப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஞானவாபி மசூதி லிங்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, விசாரணை முடித்து நீதிமன்றத்தில் அளிக்கவேண்டிய ரிப்போர்ட் லீக் ஆனது தவறு. அதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. ரிப்போர்ட்டை நீதிபதி மட்டுமே பார்க்கக் வேண்டும். இது போன்ற விஷயங்கள் தொடர கூடாது. இந்த வழக்கு முக்கியமானது. அதே சமயம் இதை கீழமை நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்காது.அதனால் இந்த வழக்கை வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அதே சமயம் ஞானவாபி மசூதியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பகுதியை சீல் செய்யவும், அது இல்லாத இடத்தில, இஸ்லாமியர்களை தொடர்ந்து அங்கு வழிபாடு செய்ய அனுமதித்தும் உத்தரவிட்டு இருந்தோம். வழக்கு விசாரணை முடியும் வரை 8 வாரங்களுக்கு இதே நிலை தொடர வேண்டும். அதே சமயம் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன் கை, கால் கழுவ மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback