பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பற்றி தமிழக ஆளுநர் சர்ச்சை பேச்சு
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவொன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக வெளியிட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய The Lurking Hydra: South Asia's Terror Travail" என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்அந்த அமைப்பினர் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் இயங்கி வருகிறார்கள். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளுக்கு தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் அது உள்ளது என்று ஆளுநர் குற்றச்சாட்டினார்.
நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது.அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்” என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்