Breaking News

குதுப்மினார் வழிபாட்டுத் தலமல்ல வரலாற்று நினைவு சின்னம் - தொல்லியல் துறை தகவல்

அட்மின் மீடியா
0

குதுப் மினார் இந்தியாவில், தில்லியில் 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். 

இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. 

குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இது பிற பல்வேறுபட்ட பழமையான, இடைக்கால கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகளால் சூழ்ந்திருப்பதால், 

இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களம் என வழங்கப்படுவதாகும். தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. 

இந்நிலையில் டில்லியின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ள குதுப்மினாரை,  27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து கட்டப்பட்டது அந்த வளாகத்தின் கோவிலில் இருந்த சிலைகள், இப்போதும் அங்கு உள்ளன. எனவே, குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என  டில்லி நீதிமன்றத்தில், சங்கர் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

டில்லி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

குதுப்மினார் ஒரு நினைவு சின்னம் தான்; வழிபாட்டுத் தலமல்ல. இது, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன், எந்த சமூகத்தின் வழிபாட்டுத் தலமாகவும் இல்லை. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின், அந்த இடத்தில் மாற்றம் செய்வது சட்டத்துக்கு விரோதமானது. கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும். அதை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு, தொல்லியல் துறைக்கு உள்ளது.அதனால், குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு நடத்த உரிமை கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback