தாஜ்மகாலில் ரகசிய அறைகளை திறக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி டாக்டர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்து இருந்தார்.
முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, அவரது நினைவாக இந்த தாஜ் மகாலை கட்டினார்,இந்த தாஜ் மகால் உலக அதிசயங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலை பார்வையிட்டு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் பா.ஜ.க நிர்வாகி ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், தாஜ்மஹாலில் உள்ள சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. உண்மைகளைக் கண்டறிய இந்த அறைகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
சில இந்து அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க புனித துறவிகள் கூறியபடி, இந்த நினைவு சின்னம் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என கூறுகின்றார்கள்மேலும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் 4 அடுக்கு கட்டிடத்தின் மேல் மற்றும் கீழ் புறத்தில் சில அறைகள் உள்ளன. அவை எப்போதும் மூடப்பட்டே உள்ளன. இந்த பூட்டிய அறைகளில் கடவுள் சிவன் இருக்கிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கப்பட்டு இருந்தது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து இந்திய தொல்லியல் துறை அதனை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி அலகாபாத் ஐகோர்ட்டு அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது
இந்த வழக்கு இன்று விசாரணைசெய்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அவர்கள் மனுதாரரின் வழக்கறிஞருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள்
எந்த அடிப்படையில் இந்த வழக்கிற்க்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகினீர்கள் நாளை நீதிபதிகளின் சேம்பருக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோருவீர்களா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் இது தொடர்பாக எம்.ஏ., பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளில் உங்களை இணைத்துக்கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள், முற்றிலும் நியாயமற்ற பிரச்சினையில் தீர்ப்பு வழங்க மனுதாரர் கோரியுள்ளார்.எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Tags: இந்திய செய்திகள்