Breaking News

வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்துக்குள் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி துவங்கியது.

அட்மின் மீடியா
0

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்துக்குள் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி துவங்கியது.


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த மாவட்ட சிவில் நீதிமன்றம் மசூதியில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. 

இந்நிலையில், மசூதியில் கள ஆய்வு பணி நேற்று துவங்கியது. ஐந்து பேர் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வை மனுதாரர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர்.ஆய்வு பணி நடப்பதையடுத்து, மசூதியிலிருந்து 1 கிலோ மீட்டர் துாரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback