நேபாள் விமான விபத்து 4 இந்தியர்கள் உட்பட 21 பேர் உடல்கள் மீட்பு
நேபாளம் 22 பயணிகளுடன் நேற்று மாயமான விமானம், மஸ்டாங் பகுதியில் விழுந்து நொருங்கியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம், மேலும் இதுவரை 21 உடல்கள் மீட்கபட்டுள்ளது,விமானத்தில் பயனம் செய்த 4 இந்தியர்கள் பலி
இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை ராணுவம் இன்று கண்டுபிடித்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்த 22 பேரில் தற்போது 21-உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 1 உடலை தேடும் தேடுதல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயனம் செய்த 4 இந்தியர்கள் விபவரம் வெளிவந்துள்ளது அதில் வைபவி பெந்த்ரே (51), அவரது முன்னாள் கணவர் அசோக் குமார் திரிபாதி (54), அவர்களது மகன் தனுஷ் (22), மகள் ரித்திகா (15) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தில் மேற்கண்ட 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்